Vijay
அடுத்த இரண்டு படங்களுக்கு இளம் நடிகருடன் கை கோர்த்துள்ளார் கெளதம் மேனன்.

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான கெளதம் மேனன் அஜித், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து அழகான காதல் கதைகளை படமாக கொடுத்துள்ளார்.

இந்த படங்களை தொடர்ந்து கவுதம் மேனன் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் தள்ளி போய் கொண்டே வந்த எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் இந்த நவம்பர் 29-ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஐசரி கணேஷ் ரிலீஸ் செய்கிறார்.

ஐசரி கணேஷின் மகன் பப்பி பட நாயகன் வருனை வைத்து கவுதம் மேனன் இரண்டு படங்களை இயக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

அதில் ஒரு படம் விஜய் நடிக்க இருந்த யோகன் அத்தியாயம் ஒன்று. தற்போது இப்படத்தை ஜோஸ்வா அத்தியாயம் ஒன்று என்ற பெயரில் இயக்கி வருகிறாராம் கவுதம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.