Gautam Kichalu Kisses to Kajal

கணவருடன் முத்த மழையில் காஜல் அகர்வால் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gautam Kichalu Kisses to Kajal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் கமல் என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

மேலும் இவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து பிசியாக படங்களில் நடித்து வருகிறார். ஒரு வேளை தன்னுடைய கணவர் நடிப்பதை நிறுத்திக் கொள் எனக் கூறினால் நிறுத்தி விடுவேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய கணவருடன் முத்த மழையில் நனையும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.