இரண்டு மெகா ஹிட் படங்களை நழுவ வெளியிட்டுள்ளார் கௌதம் கார்த்திக்.

Gautam Karthik in Missed Movies : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். பிரபல நடிகராக வலம் வந்த நவரசநாயகன் வாரிசான இவர் சினிமாவில் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இரண்டு மெகா ஹிட் படங்களை நழுவவிட்ட கௌதம் கார்த்திக்.. எந்தெந்த படம் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர் அதன்பிறகு ஹர ஹர மகாதேவகி, முத்துராமலிங்கம், என்னமோ ஏதோ, வை ராஜா வை, இந்திரஜித், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஆனாலும் இவருக்கு சினிமாவில் இன்னும் தனக்கென தனி இடம் கிடைக்காமல் போராடி வருகிறார்.

இந்த நிலையில் இவர் தவறவிட்ட இரண்டு மெகா ஹிட் படங்கள் பற்றி தெரிய வந்துள்ளது. ஆமாம் கார்த்தி லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கொம்பன் படத்தில் முதலில் நடிக்க படக்குழு கௌதம் கார்த்திக்கை தான் அணுகியுள்ளது. ஆனால் இவர் படத்தின் கதை பிடிக்கவில்லை என சொல்ல இந்த வாய்ப்பு கார்த்திக்கு சென்றுள்ளது.

இரண்டு மெகா ஹிட் படங்களை நழுவவிட்ட கௌதம் கார்த்திக்.. எந்தெந்த படம் தெரியுமா? வெளியான ஷாக் தகவல்

அதேபோல் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் வாய்ப்பு முதலில் கௌதம் கார்த்திக்கு செல்ல இதனையும் அவர் நழுவ விட்டுள்ளார்.

இந்த இரண்டு படங்களிலும் நடித்து இருந்தால் இன்று தமிழ் சினிமாவில் மார்க்கெட் உள்ள நடிகர்களில் ஒருவராக கௌதம் கார்த்திக் இடம்பிடித்து இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.