Gautam Gambhir Tweet
Gautam Gambhir Tweet

Gautam Gambhir Tweet – சமீபத்தில் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற கம்பீர். அதன் பிறகு அரசியலில் ஈடுபட போவதாக வந்த வதந்திகளுக்கு அரசியலில் ஈடுபட போவது இல்லை என்று முற்று புள்ளி வைத்தார்.

தொடர்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பல சமூக பிரச்சனைகள் பற்றியும் அரசியல் சார்ந்த பதிவுகளையும் பகிர்ந்து வந்தார்.

அதனை தொடர்ந்து,சமீபத்தில் அவரின் டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைபடத்தை பதிவிட்டு இருந்தார்.

முன்னாள் ராணுவ வீரர் உதவி புரியும் படி பதாகை ஏந்தி நின்று கொண்டு இருந்த வீரருக்கு, கம்பீர் டிவிட்டர் மூலம் உதவி செய்துவுள்ளார்.

டெல்லியில், கன்னாட் பகுதியில் கையில் ஒரு பதாகையுடன் பீதாம்பரன்,இவர் இந்தியாவின் முன்னாள் ராணுவ வீரர். இவர் உதவி கேட்டு வந்து உள்ளார்.

அந்த பாதகையில், “முன்னாள் ராணுவ வீரர். 1965-1971 காலத்தில் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் உடனான போரில் கலந்துகொண்டுள்ளேன். அண்மையில் விபத்து ஏற்பட்டது.

அதற்கு மருத்துவ செலவுக்கு பணம் இல்லை. உங்கள் உதவி தேவை. ” என்று எழுதி இருந்தது.

பதாகையுடன் கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் புகைபடத்தை கிரிக்கெட் வீரர் கம்பீர் தனது டிவிட்டர் பகிர்ந்தார்.

மேலும், அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதற்கான அடையாள அட்டையும் வைத்துள்ளார் என்பதும் குறிப்பிட்டு இருந்தார் கம்பீர்.

அத்துடன், அந்த ராணுவ வீரருக்கு சில தொழில்நுட்பக் காரணங்களால் ஓய்வூதிய தொகை கிடைக்கவில்லையே என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

கம்பீரின் இந்த பதிவை பார்த்த இந்திய ராணுவம் சார்பில் அதிகாரி ஒருவர் பதில் அளித்தார். அது “ பீதாம்பரனுக்கு உடனடியாக தேவையான உதவிகள் வழங்கப்படும் என்று இருந்தது ”. இதற்கு கம்பீர் நன்றி தெரிவித்து இருந்தார் கம்பீர்.

அவர்களின் இந்த செயலுக்கு அவரின் ரசிகர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

மேலும் பல தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது.