Gautam Gambhir in political – இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் தான் அரசியலில் ஈடுபட போவதாக பரவிய செய்திக்கு பதிலளித்து உள்ளார்.
சமீபத்தில் தான் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறபோவதாக அறிவித்த கௌதம் கம்பீர், கிரிக்கெட்டின் ஓய்வுற்கு பிறகு அரசியலில் ஈடுப்பட போவதாக பலவாறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அந்த செய்திக்கு கம்பீர் பதில் அளித்து உள்ளார்.
கம்பீர் கூறியது : “நான் அரசியலில் களமிறங்க போவதில்லை. இது போன்ற வதந்திகளை நானும் சந்தித்தேன், நான் சமூக பிரச்சனைகளை தட்டி கோட்பதும், அதனை பற்றி பேசுவதும் இது போன்ற செய்திகளுக்கு காரணம் என கருதுகிறேன்.
என் கருத்தை டிவிட்டரில் எனது பக்கத்தில் பதிவிப்பது எனக்கு மிகவும் முக்கியமானது, மற்றும் இந்த சமூக வலைதளத்தில் நகைச்சுவை மற்றும் கிண்டல் போன்றவைகளை செய்பவன் நான் இல்லை.
இந்திய நாட்டின் ஒரு சாதாரண குடிமகனாக இந்த நாட்டிட்டில் நடக்கும் சமூக பிரச்சனைகளை பற்றி கூறுவதும், அதனை சரி செய்ய முயல்வதும் என்னுடைய கடமையாகும்.
இதனை கொண்டே சில நாட்களாக, நான் ஆரசியலில் களமிராக போகாதக வதந்தி பரவி உள்ளது.
ஆனால், நான் அரசியலில் ஈடுப்பட போவது இல்லை. மேலும், அரசியல் என்பது எனக்கு முழுவதுமாக வேறு துறை.
கடந்த 25 ஆண்டுகாலம் எதுவும் செய்யவில்லை, ஆனால் இனிமேல் அப்படி இல்லை. என்ன செய்ய போகிறேன் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
மற்றும், நான் என்னை ஊக்கப்படுத்தி கொள்வது செயல்பாடுகளால் மட்டுமே உண்மை.
நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக இருந்ததால் ஒரு நல்ல பியிற்சியாளராய் இருக்க முடியாம என்பது எனக்கு தெரியாது, அதனி மதிப்பிட்டே தெரிந்து கொள்ள முடியும்.
நல்ல பயிற்ச்சியளராக வருவதற்கு வலிமை, ஆர்வம் மற்றும் முழு ஈடுபாடு தேவை. இவை அனைத்தும் என்னிடம் உள்ளதா என்று மதிப்பீட்டு பின்னர் அதனை பற்றி சிந்திப்பேன்.
மற்றும் நான் மிகவும் நேரடியானவன், அதனால் எந்த இடமாக இருந்தாலும் இருந்தாலும் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று எனக்கு தோன்றவில்லை. “ என்று கூறினார்.