Gas Troubles :
Gas Troubles :

Gas Troubles :

வாயுத்தொல்லையில் இருந்து விடுபட இதோ எளிமையான உணவு முறைகள்.

நமது இரைப்பையிலும் ,குடலிலும் சேரும் காற்றே கேஸ் என அழைக்கப்படுகிறது.

அறிகுறிகள்;(symptoms) :

வயிறு வீக்கம் ,வயிறு பெரிதானது போன்ற தோற்றம் ,வயிறு முழுக்க நிரம்பி இருப்பது போன்ற உணர்வு, பசியின்மை ,சரியாக சாப்பிட முடியாது, காற்று வாய் வழியாகவும் ஆசன வாய் வழியாகவும் வெளியேறுதல் , புளித்த ஏப்பம், நெஞ்சு கரிப்பது போன்ற உணர்வு, இவைகள் சில அறிகுறிகள் ஆகும்.

#வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:

*உணவு செரிமானம் ஆகி, ஒரு பகுதி வயிற்றிலிருந்து சிறுகுடலுக்கு செல்கிறது. மீதி உணவு பெருங்குடலுக்குத் தள்ளப்படும்.

அந்த மிச்ச உணவில் ஆபத்தில்லாத பாக்டீரியா கிருமிகள் நிறைய இருக்கும் மிச்ச மீதி உணவோட அந்த பாக்டீரியா சேர்ந்து உணவு புளித்து வாயுவாக மாறுகிறது.

இந்த வாயுவில் நாற்றம் இல்லாதவரைக்கும் பிரச்சினை இல்லை. நாற்றமும் சத்தமும் அதிகமானா அது ஏதோ உடல்நலக் கோளாறுக்கான அறிகுறியாக எடுத்துக்கொள்ளலாம். அதை சாப்பாடு மூலமாக சரி செய்யலாம்.

#வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்கள்:

*வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1.அதிகமான வாயு உள்ள உணவுகள்.

*பால் மற்றும் பால் பொருள்கள், ப்ராக்கோலி ,காலிஃப்ளவர்,முட்டைகோஸ், வெங்காயம், பட்டாணி,பீன்ஸ் ,சோயாபீன்ஸ்,உருளைக்கிழங்கு ,ஓட்ஸ், கோதுமை போன்றவை.

2. மிதமான வாயு உள்ள உணவுகள்:

ஆப்பிள் ,வாழைப்பழம், கேரட், செலரி ,மற்றும் கத்தரிக்காய்….

3. குறைந்த வாயுவை வெளியேற்றும் உணவுகள்:

*முட்டை, மீன், ஆட்டிறைச்சி, எண்ணெய் ,அரிசி….நிவாரண முறைகள்:(solution)

1. காய்ந்த கறிவேப்பிலை ஓமம் கசகசா சுண்டைக்காய் வற்றல் சுக்கு இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிடவும்.

2. காலையில் அருகம்புல் சாறு இரவில் குப்பைமேனி இலை சாறு இவற்றை குடித்து வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம்.

3. ஆரஞ்சு பழத்தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்துவர வாயு தொந்தரவு நீங்கும்.

4.வெள்ளைப் பூண்டை பசும்பாலில் வேக வைத்து சாப்பிட்டு வரலாம்.

5. வேப்பம் பூவை பொடி செய்து வெந்நீரில் கலந்து குடிக்க வாயு தொல்லை குறையும்

6. வெங்காயம் பனங்கற்கண்டு விளக்கெண்ணெய் இவற்றை வதக்கி சாப்பிட வாயு தொல்லை குறையும்.

7. ஓமத்தை வறுத்து உமியை நீக்கி விட்டு அரைத்து உப்பு பனைவெல்லம் சேர்த்து சாப்பிட வாயு தொல்லை குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here