Garlic Rice :
Garlic Rice :

Garlic Rice :

பொதுவாக பூண்டு சாப்பிடுதல் என்றால் அனைவரின் முகமும் சுருங்கிவிடும். ஆனால் அதனை அரைத்து, சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எளிதில் சாப்பிட்டுவிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

1. பூண்டு – 15 பல்

2. சாதம் – 1 கப்

3. வெங்காயம் – 2

4. கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்

5. கறிவேப்பிலை – தேவைக்கு

6. காய்ந்த மிளகாய் – 3

7. மிளகு தூள் – 1 ஸ்பூன்

8. எண்ணெய், உப்பு – தேவைக்கு

செய்முறை ;

பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். பிறகு, பெரிய வெங்காயமாக இருந்தால் 2 சின்ன வெங்காயமாக இருந்தால் 10 முதல் 15 எடுத்து அதனையும் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.

பிறகு, வாணலில் எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து அதனுடன் நறுக்கிய பூண்டு போட்டு அதன் பச்சை வாசம் போகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து, பூண்டு வதங்கியதும் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தேவைக்கு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து பூண்டு மற்றும் வெங்காயம் சேர்ந்து வதங்கியதும் அதில் வடித்த சாதம் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான பூண்டு சாதம் தயார்.

பயன் : வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாது. மற்றும் வாயு தொல்லை முற்றிலும் குணமடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here