Ganguly about Dhoni :
தோனி பற்றி கங்குலி கூறுகையில் :-
தோனி இனிமேல் நீண்ட நாட்களுக்கு விளையாட மாட்டார். இதை இந்திய வீரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவரால் நீண்ட காலத்துக்கு விளையாட முடியாது என்பதே உண்மை. ஆனால் ஓய்வு குறித்த முடிவை தோனி தான் எடுக்க வேண்டும்.
வாழ்க்கையில் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு. இதுபோல சிறந்த விளையாட்டு வீரர்கள் காலம் ஒருநாள் முடிவுக்கு வரும். தங்களது ஓய்வு முடிவை அவர்கள் அறிவித்து தான் ஆக வேண்டும். கால்பந்து ‘ஜாம்பவான்’ மாரடோனாவும் இதுபோலத் தான் விடை பெற்றார்.
இன்னும் இரண்டு வாரத்திற்கு வனிதாவை காப்பாற்றிய கமல்ஹாசன் – எதிர்பார்க்காத ஷாக்கிங் ட்விஸ்ட்!
கிரிக்கெட்டில் பிராட்மேன், லாரா, சச்சின் என எல்லோரும் இப்படித் தான். விளையாட்டு நட்சத்திரங்களின் ‘சிஸ்டம்’ இது தான். தோனிக்கும் இப்படித் தான் ஏற்படும்.
தற்போது தனது கிரிக்கெட் வாழ்க்கையில் எந்த இடத்தில் உள்ளோம், அடுத்து என்ன செய்யப் போகிறோம், தொடர்ந்து அணியில் நீடிக்கலாமா, முன்பு போல போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு வெற்றி தேடித்தர முடியுமா என்பது குறித்து யோசிக்கும் நிலையில் உள்ளார்.
ஏனெனில் சச்சின், தோனி, கோஹ்லி போன்ற வீரர்கள் களத்தில் விளையாடும் வரை, அவர்கள் எப்படியும் வெற்றி பெற்றுத் தருவர் என்ற ரசிகர்கள் எதிர்பார்ப்பு இருந்து கொண்டே தான் இருக்கும். அதேநேரம் என்னைப் பொறுத்தவரையில் ஓய்வு விஷயத்தில் தோனி தான் முடிவெடுக்க வேண்டும்.