அஜித் பிறந்தநாளை முன்னிட்டு கேங்ஸ்டா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருந்தது. அதனைத் தொடர்ந்து அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கான தகவல்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் நடிகர் அஜித் குமாரின் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கும் ஏகே 62 படத்தின் தலைப்பு “விடாமுயற்சி” என்றும் இப்படத்தை மகிழ்த்திருமேனி இயக்க அனிருத் இசையமைக்க இருப்பதாக அதிகாரபூர்வமான தகவலை வெளியிட்டு இருந்தது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு மாபெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருந்ததை தொடர்ந்து துணிவு படத்தில் ஜிப்ரான் இசையில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை வெளியாகாமல் இருந்த கேங்ஸ்டா பாடலின் முழு வீடியோவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் நேற்றைய தினம் அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தி இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.