துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் உலகம் முழுவதும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் துணிவு.

வெளியானது துணிவு படத்தின் மூன்றாவது சிங்கிள் ட்ராக்.. பட்டைய கிளப்பும் கேங்ஸ்டா பாடல்.!!

ஜிப்ரான் இசையமைக்க மஞ்சு வாரியர், சமுத்திரகனி ,அமீர், பாவணி உட்பட எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படத்திலிருந்து சில்லா சில்லா என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் மற்றும் காசேதான் கடவுளடா என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Gangstaa Lyric Song
Gangstaa Lyric Song

இதனைத் தொடர்ந்து கேங்ஸ்டா என்ற மூன்றாவது சிங்கிள் ட்ராக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அறிவிப்பின்படி தற்போது பாடல் வெளியாகி உள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.