Gangs Of Madras Review

Gangs Of Madras Review : சி. வி குமாரின் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் தயாரிப்பில் அசோக், பிரியங்கா ருத், டேனியல் பாலாஜி, ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கேங்ஸ் ஆப் மெட்ராஸ்.

படத்தின் கதைக்களம் :

ஹிந்து பெண்ணான பிரியங்கா ருத் (ஜெயா) முஸ்லீம் மதத்தை சேர்ந்த அசோக்கை ( இப்ராஹிம் ) காதலிக்கிறார். இவர்களது காதலுக்கு பிரியங்கா வீட்டில் சம்மந்தம் தெரிவிக்காததால் முஸ்லிமாக மதம் மாறி இப்ராஹீமை திருமணம் செய்து கொள்கிறார். தன்னுடைய பெயரை ரஷ்யாவாக மாற்றி கொள்கிறார்.

நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அசோக் போதை மருந்து கடத்தி வியாபாரம் செய்து வரும் வேலு பிரபாகரனின் கேங்கில் வேலைக்கு சேர்கிறார். அதன் பின்னர் அசோக் என்கவுண்டர் செய்யப்படுகிறார்.

இந்த என்கவுண்டர் சம்பவத்தில் வேலு பிரபாகரனுக்கும் சம்மந்தம் உள்ளது. இது எப்படி பிரியங்காவிற்கு தெரிய வருகிறது. அதன் பிறகு இந்த கேங்கை பிரியங்கா எப்படி அழிக்கிறார்? இவருக்கு டேனியல் பாலாஜி எப்படி உதவுகிறார் என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிகர் நடிகைகளின் நடிப்பு :

பிரியங்கா ருத்தின் துணிச்சலான நடிப்பு பாராட்டும் விதத்தில் அமைந்துள்ளது. அசோக், வேலு பிரபாகரன், ஆடுகளம் நரேன், டேனியல் பாலாஜி ஆகியோர் தங்களது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இசை :

Hari Dafusia இந்த படத்திற்கு இசையமைக்க Shyamalangan பின்னணி இசையமைத்துள்ளார். இவர்கள் இருவரும் பணிகளும் சிறப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக பின்னணி இசை மிக சிறப்பாக அமைந்துள்ளது.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

இந்த படத்திற்கு கார்த்திக் குமார் ரசிக்கும் படியான வகையில் ஒளிப்பதிவு செய்ய, ராதாகிருஷ்ணன் தனபால் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். எடிட்டிங்கில் மட்டும் இன்னும் கொஞ்சம் தேவையில்லாத காட்சிகளை நீக்கி இருக்கலாம்.

இயக்கம் :

படம் முழுக்க அடிதடி, வெட்டு, குத்து என திரில்லராக படத்தை கொண்டு சென்றுள்ளார் சி.வி குமார். படம் முழுவதையும் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

குறிப்பாக ஒரு நாயகியை வைத்து இப்படியான கேங்ஸ்டர் படம் இயக்கி இருப்பது பாராட்ட வேண்டிய ஒன்று.