Ganesh Venkatraman Cute Baby Video

பிக்பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம் தன் மகளின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ganesh Venkatraman Cute Baby Video : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் கணேஷ் வெங்கட்ராமன். தொடர்ந்து வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

சமீபத்தில் கணேஷ் வெங்கட்ராம் மற்றும் நிஷாவிற்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு சமைரா என அவர்கள் பெயர் சூட்டியுள்ளனர்.

தற்போது அந்த குழந்தையின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கணேஷ் வெங்கட்ராம். செம க்யூட்டாக இருக்கும் குழந்தையை ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.