Ganapathy Homam

நற்பலன்களை தரும் கணபதி ஹோமம்:

☆ எந்தத் தொழில் தொடங்கினாலும் கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.

☆ விநாயகரே முழு முதற்கடவுள். சிவபெருமான் முப்புரங்களையும் அழிக்க புறப்பட்ட போது, கணபதி மந்திரத்தை சொல்ல தவறிவிட்டார். எனவே செல்லும் வழியில் அவரது தேர் பழுதானது.

☆ பெற்ற பிள்ளையாக இருந்தாலும் கூட கணபதியை வணங்கிய பிறகே, எந்த செயலையும் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டவரே சிவபெருமான் தான். அவரே அந்த விதியை கடைபிடிக்காததால் தான், இந்த நிலைமை ஏற்பட்டது.

☆ சிவபெருமானின் தேர் அச்சு முறிந்ததாக சொல்லும் இடமே தற்போது ‘அச்சிறுபாக்கம்’ என்று அழைக்கப்படுகிறது. செங்கல்பட்டு அருகே இந்த ஊர் இருக்கிறது.

☆ எந்தத் தொழில் தொடங்கினாலும், கணபதி ஹோமம் செய்த பிறகு தொடங்குவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

☆ வீடுகளில் கிரகப்பிரவேசம் செய்வதற்கு முன்பாகவும், கணபதி ஹோமம் செய்வார்கள். அது காலா காலத்திற்கும் வீட்டில் நற்பலன்களைக் கிடைக்கச் செய்யும்.

☆ குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தொடர்ச்சியாக உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் கூட, கணபதி ஹோமம் செய்யலாம்.

☆ கணபதி ஹோமத்தை `விநாயகர் வேள்வி’ என்றும் சொல்வதுண்டு. விநாயகரை வணங்கி, விநாயகர் குறித்த மந்திரங்கள் சொல்லி, அவரை புகழ்ந்து பக்திப் பாடல்களை மனமுருகிப் பாடி கணபதி ஹோமத்தை நிறைவேற்ற வேண்டும்.

☆ நம் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருப்பினும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

☆ புதிய இயந்திரங்கள் வாங்கினால், அவை பழுதின்றி இயங்க விநாயகர் வேள்வி அவசியம்.

☆ நல்ல காரியங்களில் மட்டுமின்றி, மறைந்த நம் முன்னோரை நினைவுபடுத்தும் நாட்களான தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய நாட்களிலும் கணபதி ஹோமம் செய்வது சிறப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here