Rajinikanth Relief

Rajinikanth Relief : கஜா புயலால் பாதிக்கபட்ட மக்களுக்காக திரையுலக பிரபலங்கள் பலரும் உதவி செய்து வருவதை தொடர்ந்து ரஜினிகாந்தும் உதவி செய்துள்ளார்.

சமீபத்தில் உருவாகி இருந்த கஜா புயல் கரையை கடக்கும் போது டெல்டா மாவட்டங்களான புதுக்கோட்டை, தஞ்சை, வேதாரண்யம் ஆகிய பகுதிகள் கடும் சேதத்திற்கு ஆளாகி இருந்தன.

இந்த புயலால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். எனவே திரையுலக பிரபலங்கள் பலரும் டெல்டா மாவட்ட மக்களுக்காக உதவி செய்து வருகின்றனர்.

சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், தளபதி விஜய் ஆகியோர்களை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தன்னுடைய ரஜினி மக்கள் மன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதாவது, ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக ரூ 50 லட்சம் நிவாரண பொருட்களுக்காக பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார்.

மேலும் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் ரூ 10 லட்சம் ரூபாயை முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். இவர்களை தொடர்ந்து இன்னும் பலரும் உதவுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.