
Gaja Cyclone Relief : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயல் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, “கஜா புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் சீர் செய்யும் போர்க்கால நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
கஜா புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் இருந்த மக்களை எந்தவித பாதிப்பும் இன்றி, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி 493 முகாம்களில் அவர்களை தங்கவைய்க்கபட்டுள்ளனர்.
மேலும் அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, குடிநீர், போர்வை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி குடும்பம் ஒன்றிற்கு தலா 10 கிலோ அரிசி, மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, சேலை போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
கஜாபுயல் காரணமாக, இதுவரை 45 பேர் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கு தலா 10 பட்சம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் புயலின் போது, 102 மாடுகள் மற்றும் 633 ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும் உயிரிழந்த மாடு ஒன்றிற்கு தலா 30000 ரூபாயும் ஆயிரமும், ஆடு ஒன்றிற்கு தலா 3000 ரூபாயும் வழங்கப்படும்.
மேலும் கஜா புயல் காரணமாக சேதமடைந்த வீடு மற்றும் குடிசைகள் உரிய நிவாரண நிதி விரைவில் வழங்கப்படும்” இவ்வாறு கூறி இருந்தார்.