Sun Nwtwork Gaja Relief

Sun Nwtwork Gaja Relief : கஜா புயல் நிவாரண நிதியாக சன் நெட்ஒர்க் மிக பெரிய தொகையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கிய கஜா புயலால் அம்மாவட்டங்கள் கடுமையாக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

இதனால் அம்மாவட்ட மக்களுக்காக நடிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சன் நெட்ஒர்க் நிறுவனமும் நிவாரண நிதியாக ரூ 2 கோடியை அளித்துள்ளது. இதனால் சன் நெட்ஒர்க்கிற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.