Aranthangi Nisha

Aranthangi Nisha : கஜா புயல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் மக்களுக்காக அறந்தாங்கி நிஷா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியில் பிரபலமானவர் நிஷா.

இவர் தற்போது வெள்ளித் திரையிலும் ஓரு சில படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது கஜா புயலால் நாகை, காரைக்கால், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை தேவைகள் கூட கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை நிஷா செய்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது முகநூல் பக்கத்தில் நிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ரசிகர்களிடம் உதவி கேட்டு உருக்கமாக பேசியுள்ளார்.

நிஷாவின் இந்த உதவி மனப்பான்மையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஒரு சில ரசிகர்கள் காமெடி பண்ற உங்களுக்கு உள்ளவும் இப்படி ஒரு நல்ல மனசு இருக்கறது நினைக்கும் போது மகிழ்ச்சியாகி இருக்கு எனவும் கூறியுள்ளனர்.

மேலும் நிஷாவின் இந்த வீடீயோவை பார்த்த பல ரசிகர்கள் தாங்கள் உதவ முன் வருவதாக கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.