Gabriella in Murattu Single

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க உள்ளார் பிக்பாஸ் புகழ் கேப்ரில்லா.

Gabriella in Murattu Single : தமிழ் சின்னத்திரையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டு வாரங்கள் ஆனது.

பிக் பாஸில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரெல்லா. தைரியமாக பிக் பாஸ் வீட்டில் விளையாடியதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

பிக் பாஸ்க்கு பிறகு இவரை மிஸ் செய்வதாக ரசிகர்கள் வருத்தப்பட்டு வந்தனர்.

ஆனால் தற்போது விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க உள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முரட்டு சிங்கள் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்க உள்ளார்.

இது கேபி ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.