நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் 13 என்னும் படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் திரை உலகில் பிரபல இசையமைப்பாளராக மட்டுமின்றி பிரபல நடிகராகவும் வலம் வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தற்போது 13 என்னும் திரைப்படத்தில் நடிக்கிறார். விவேக் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், கௌதம் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். இதில் இயக்குனர் கௌதம் மேனன் வழக்கம் போல் போலீஸ் கெட்டப்பில் தான் நடிக்கிறார். ஆனால் இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் இதுவரை வெளியான படங்களை விட இப்படம் சற்று வித்தியாசமாகவும், திரில்லராகவும் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், 13 படத்தின் டீசர் நாளை மாலை 6:07 மணி அளவில் வெளியாகும் என்ற அதிகாரவபூர்வமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.