Friends Movie Secrets

தளபதி விஜயின் பிரண்ட்ஸ் பட வாய்ப்பை இரண்டு நடிகைகள் தவற விட்டுள்ளனர்.

Friends Movie Secrets : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிகர் சூர்யாவும் இணைந்து நடித்திருந்த திரைப்படம் பிரண்ட்ஸ். சித்திக் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தேவயானி நடித்திருந்தார்.

ஆனால் முதலில் இந்தப் படத்தில் தேவயானி நடிப்பதாக இல்லை. ஜோதிகா தான் நடிக்க இருந்தார். கால்ஷீட் பிரச்சினையால் அவரால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இதனையடுத்து இந்த வாய்ப்பு நடிகை சிம்ரனுக்கு சென்றுள்ளது. ஆனால் அவரிடம் கால்ஷீட் பிரச்சனையால் அவரும் இப்படத்தின் வாய்ப்பை நழுவ விட்டுள்ளார்.

இறுதியாகத் தான் இந்த வாய்ப்பு நடிகை தேவயானி கிடைக்க அவர் அவருடைய கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.