Fridge Water
Fridge Water

Fridge Water : கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர்ச்சத்துக்குறைப்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம்?”

☀ கோடைக்காலத்தில் பெரும்பாலான குழந்தைகள், உடலில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை ஈடுசெய்ய, ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடிப்பார்கள்; ஐஸ் கியூப், ஐஸ் கிரீம் ஆகியவற்றை அதிகம் சாப்பிடுவார்கள்.

☀ இப்படிச் சட்டெனக் குளிர்ச்சியான பொருள்களைச் சாப்பிடும்போது, நம் உடலில் குளிர்ச்சி ஏற்படாது.

மாறாக, உடலில் வெப்பநிலை உயரும். ஐஸ் கியூப்பை நேரடியாக அப்படியே சாப்பிடுவதால், ரத்த சோகை பாதிப்பு ஏற்படலாம்.

☀ கோடைக்காலத்தில் குழந்தைகளின் நீர்ச்சத்துக்குறைபாட்டை ஈடுசெய்ய, உடலுக்குத் தாது உப்புகள் மட்டுமே தேவை.

அவை எந்த குளிர்பானத்திலும் இருக்காது. குளிர்பானத்தில் வெறும் கலோரிஸ் மட்டுமே இருக்கும்.

அவற்றில் செயற்கையான சர்க்கரை, பிரசர்வேட்டிவ்ஸ், நிற மூட்டிகள் மட்டுமே இருக்கின்றன. குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது. அவை ஆரோக்கியத்துக்கும், உடல்நலத்துக்கும் கேடானது.

☀ எளிமையான தீர்வாக, இளநீர் குடிக்கலாம். வெள்ளரிப் பழம், தர்ப்பூசணி பழம் சாப்பிடலாம்.

☀ ஏசி அறையிலேயே இருப்பவர்கள் அதிக இளநீரைக் குடிக்கக்கூடாது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சை பழத்தைப் பிழிந்து அதனுடன் ஒரு கைப்பிடி புதினாவைச் சேர்த்து சிறிது நேரம் கழித்துக் குடிக்கலாம். இது மிகச் சிறந்த ஊட்டச்சத்து பானம்.

☀ சர்க்கரை சேர்க்காமல், பழங்களை அப்படியே அல்லது ஜூஸ் செய்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பெரியவர்களுக்கும் இவை பொருந்தும்.

☀ ஏ. சி-யில் இருக்கும்போது போதிய அளவு தண்ணீரை தொடர்ந்து கண்டிப்பாகக் குடிக்கவேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here