Free Tickets For Bigil Movie
தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் இலவசமாக சில இடங்களில் தரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Free Tickets For Bigil Movie : அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வரும் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. நயன்தாரா ஜோடியாக நடித்து உள்ளார்.

ரகுமான் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பிகில் படம் சுமார் 4000 திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்து இருந்தது. படத்திற்கான முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது.

பிகில் பெரிய படம் தான், அதுக்காக..? – கார்த்தி ஓபன் டாக்.!

மேலும், முதல் நாள் முதல் காட்சியை பார்க்க தளபதி ரசிகர்கள் மழையிலும் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி கடைகளிலும், பட்டாசு கடைகளிலும் குறிப்பிட்ட தொகைக்கு பொருட்கள் வாங்கினால் பிகில் டிக்கெட் இலவசமாக அளிக்கப்படுவதாக தெரிவித்து உள்ளார்கள்.

ஆனால், இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியாத நிலையில், படக்குழுவை காட்டிலும் தளபதி ரசிகர்களிடம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here