தமிழ்நாட்டின் ரேசன் கடைகளில் அரிசியோட மாஸ்கும் இலவசமாக கொடுக்க உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Free Mask Scheme in Tamil Nadu : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் தாக்கம் அதிதீவிரமாக இருந்து வருகிறது. இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றுக்கு 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்படைந்துள்ளனர். இதனால் மக்கள் பொருளாதாரத்தை இழந்து தவிப்பதாக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய சூழ்நிலையில் தனிமனித இடைவெளியும் மாஸ்க் அணிவதும் மட்டுமே இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழியாக இருந்து வருகிறது.

பார்வையில்லாமல் காட்டு பயலே பாட்டுக்கு கீபோர்ட் வாசித்த குட்டிப் பெண் – வைரலாகும் வீடியோ

இதன் காரணமாக இனி தமிழக ரேஷன் கடைகளில் இலவச ரேசன் பொருட்களுடன் சேர்த்து அட்டை ஒன்றுக்கு இரண்டு மாஸ்க்குகளை இலவசமாக வழங்கவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இந்த புதிய திட்டம் தமிழகம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.