தீபாவளியில் வெளியாகப் போகும் நான்கு படங்கள் குறித்து பார்க்கலாம்.
தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று. அதிலும் இந்த வருடம் தீபாவளியில் வெளியாக போகும் நான்கு படங்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதனைக் குறித்து பார்க்கலாம் வாங்க.
மகிழ்திருமேனி இயக்கத்திலும், லைக்கா நிறுவனம் தயாரிப்பிலும் அஜித் நடித்துள்ள படம் விடா முயற்சி. மேலும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். அஜித் நடிக்கும் நிர்வாகிகள் இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவதாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பிலும் இந்த படம் உருவாக்கி உள்ளது.
மூன்றாவதாக ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இயக்குனர் ராஜேஷ் இயக்கத்திலும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பிலும் இந்த படம் உருவாகி உள்ளது.
நான்காவதாக சூர்யா நடிப்பில் பிரமாண்டமாக வெளியாக உள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படம் தீபாவளி என்று வெளியாகும் என தகவல் வெளியானது.
எனவே இந்த நான்கு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.