Formers Loan Announcement

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடி தேர்தல் களத்தையே மாற்றியமைத்துள்ளது.

Formers Loan Announcement : விவசாயிகளின் நலன் காக்கும் அரசு என்று தெரிவித்து வரும் விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா, புயல் மற்றும் ஜனவரி மாத மழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கருதி 12,110 கோடி ரூபாய் கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் விவசாய கடனை இரண்டு முறை தள்ளுபடி செய்த ஒரே அரசு என்ற பெருமையை அ.தி.மு.க அரசு பெற்றுள்ளது. முதலமைச்சரின் அறிவிப்பு அரசியல் வட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

“விசாயிகள் படும் துயரங்களை விவசாயியாக நான் நன்கு அறிவேன் என்று தெரிவித்து வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நிவர் புயலால பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு நிவரணங்களையும் வழங்கினார். அதேபோல்,புரேவி புயல் மற்றும் ஜனவரி மாத மழையினால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்கும் நிவாரணங்களை உரிய நேரத்தில் வழங்கினார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மீட்டு எடுக்கும் விதமாக இடுபொருள் உதவித்தொகை 1,717 கோடி ரூபாயை 16.43 இலட்சம் விவசாயிகளுக்கு வழங்க உத்திரவிட்டார்.

இந்நிலையில், பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கும் விதமாக 16.43 லட்சம் விவசாயிகளின் 12, 110 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்ட பேரவையில் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு விவசாய சங்கங்கள் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளன. விவசாயியே முதலமைச்சராக இருப்பதால், தங்களின் துயர் துடைக்கும் வகையில் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் முதலமைச்சரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு அரசியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பு எதிர்கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியான தருணத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு தேர்தல் களத்தை தனக்கு சாதகமாக்கியுள்ளார்.

கிராம சபை என்ற பெயரில் ஸ்டாலின் மக்களை ஒரிடத்தில் திரட்டி அவர்களிடம் உரையாற்றினார். தற்போது, அதனையே பெயர் மாற்றி புகார் பெட்டி என்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களை நேரடியாக அவர்கள் இடத்திற்கே சென்று சந்தித்து குறைகளை கேட்டறிந்து அதற்கு
தீர்வு காணும் வகையில் அவர்களுக்கு வேண்டிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். விவசாயக்கடன் தள்ளுபடி அறிவிப்பு மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் களத்தை தன்வசம் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.