Football League Chennai
Football League Chennai

Football League Chennai – கேரளாவுக்கு எதிரான “ஐ-லீக்” கால்பந்து போட்டியில் பெட்ரோ மான்ஜி “ஹாட்ரிக்” கோலடித்து கைகொடுக்க சென்னை சிட்டி அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்தியாவில், உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்கும் “ஐ-லீக்” தொடரில் 12-வது சீசன் நடக்கிறது.

கோயம்புத்தூரில் நடந்த லீக் போட்டியில் சென்னை சிட்டி, கேரளா அணிகள் மோதின. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் பெட்ரோ மான்ஜி முதல் கொள் அடித்தார்.

இதற்கு, 17-வது நிமிடத்தில் கேரளாவின் முசா முடே ஒரு கோலடித்து பதிலடி தந்தார்.

பி 38-வது நிமிடத்தில் கேரள வீரர் ஜோயல் அயேனி கோலடிக்க முதல் பாதியில் சென்னை அணி 1-2 என பின்தங்கி இருந்தது.

இரண்டாம் பாதியில் எழுச்சி கண்ட சென்னை அணிக்கு 59, 80 –வது நிமிடக்தில் கைகொடுத்த பெட்ரோ மான்ஜி “ஹாட்ரிக்” கோலடித்தார்.

சமீபத்தில் இவர் ஹில்லாங் லஜாங் அணிக்கு எதிராக 3 கோல் அடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இறுதியில் சென்னை அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 11 போட்டியில், 7 வெற்றி, 3 டிரா மற்றும் ஒரு தோல்வி என 24 புலிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

நெரோகா அணி தொடர்ந்து 21 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.