Football Chennai Team
Football Chennai Team

Football Chennai Team – ஐ-லீக் கால்பந்து தொடருக்கான லீக் போட்டியில் சென்னை சிட்டி அணி 4-3 என்ற கொள் கணக்கில் அய்சால் அணியை வென்றது.

இந்தியாவில் உள்ளூர் கால்பந்து கிளப் அணிகள் பங்கேற்குற்கும் ‘ஐ-லீக்’ தொடரின் 12-வது சீசன் நடக்கிறது.

கோயம்புத்தூரில் நடந்த லீக் போட்டியில் சென்னை சிட்டி, அய்சால் அணிகள் மோதின. ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் சென்னை அணியின் சான்டிரோ ரோட்ரிக்ஸ் முதல் கோலடித்தார்.

முதல் பதி முடிவில் போட்டி 1-1 என சம நிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்திய சென்னை அணிக்கு பெட்ரோ மான்ஜி ஆட்டத்தின் 60,80-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

அய்சால் அணி வீரர் இசாக் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஆட்ட நேர முடிவில் சென்னை சிட்டி அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இதுவரை விளையாடிய 13 போட்டியில், 9 வெற்றி 3 டிரா மற்றும் 1 தோல்வி என 30 புலிகளுடன் சென்னை அணி முதல் இடத்தில் நீடிக்கிறது.

அடுத்த இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் சர்ச்சில் பிரதர்ஸ், ரியல் காஷ்மீர் அணிகள் உள்ளனர்.