Foot irritation
Foot irritation

Foot irritation : சர்க்கரை நோய் உள்ள பல பேருக்கு பாத எரிச்சல் என்பது தீராத தொந்தரவாக உள்ளது.

முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை போல சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாதத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தே தீர வேண்டும்.

அவ்வப்போது பாதங்களை சுத்தம் செய்வது அவசியம். பாத எரிச்சலை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் மூலம் சில குறிப்புகளை பார்ப்போம்.

☆ மருதாணியில் எலுமிச்சை சாறு சேர்ந்து நன்கு அரைத்து அதை பாதத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து பாதத்தை சுத்தம் செய்து வந்தால் பாத எரிச்சல் குறையும்.

☆ பாகற்காயை அரைத்து பாதத்தில் கட்டினால் பாத எரிச்சல் குணமாகும்.

☆ இரவு உறங்கும் முன்பு வெந்நீரில் உப்பு கலந்து 10 நிமிடங்கள் காலை ஊற வைத்து பின் சுத்தமான நீரில் கால்களை சுத்தம் செய்து, தேங்காய் எண்ணையை காலில் தடவுவதன் மூலம் கால் எரிச்சல் குறையும்.

☆ பாத எரிச்சல் குறைய எட்டிப்பழத்தை வெதுப்பி கீழே கொட்டி பாதங்களினால் மிதித்து தேய்க்க பாத எரிச்சல் குறையும்.

☆ சோற்றுக்கற்றாழையில் உள்ள சோற்றை பாதத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து சுத்தம் செய்தால் பாத எரிச்சல் குறையும், பாத வெடிப்பு குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here