Foot ball Anthem From jada
முதல் முறையாக புட் பாலிற்காக புட் பால் ஆன்தம் உருவாக்கியுள்ளது கதிரின் ஜடா படக்குழு.

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், துணை நடிகராகவும் நடித்து கலக்கி வருபவர் கதிர். இவர் தளபதி விஜயுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஜடா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் புட் பால் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ளது.

இதனால் படக்குழு புட் பாலிற்காக ஆன்தம் ஒன்று உருவாக்கி வெளியிட தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

ஜடா திரைப்படம் உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 6-ம் தேதி ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.