India Vs Bangladesh

India Vs Bangladesh : ஒலிம்பிக் போட்டிக்கான கால்பந்து தகுதிச் சுற்றில் லீக் போட்டியில் இந்தியா வங்க தேசத்தை வீழ்த்தியது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 2020-ல் ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதற்கான பெண்கள் கால்பந்து போட்டி ஆசிய பிரிவு தகுதி சுற்றில் இந்தியா, ஈரான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றனர்.

முதல் சுற்றுக்கான ‘ சி ‘ பிரிவில் இந்திய அணி மியான்மர், நேபாளம், வங்கதேசம் அணிகளுடன் இடம் பிடித்துள்ளது.

இப்போட்டிகள் மியான்மரில் நடக்கிறது. நேபாளதிற்கு எதிரான ‘ டிரா ‘ செய்த இந்திய அணி அடுத்து விளையாடிய போட்டியில் வங்கதேசத்தை ஒரு கைப்பார்த்தது.

இப்போட்டியில் தொடக்கம் சற்று கலக்கமாக இருந்த இந்திய அணி அடுத்த 16-வது நிமிடதில் சுதாரித்து கொண்ட இந்திய அணி ஆதிக்கம் செலுத்த தொடாகியது.

இந்திய அணிக்கு கிடைத்த ‘ பெனால்டி கிக் ‘ வாய்ப்பை இந்திய அணியின் கமலா தேவி சரியாக பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார்.

மற்றும் பாலா தேவி 22,23-வது நிமிடதில் கோல் அடிக்க, இந்தியா 3-0 என்று முதல் பாதி ஆட்டத்தை முடித்தது.

இரண்டாம் பாதியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து, கமலா தேவி மீண்டும் கோல் அடித்தார்.

சக வீராங்கனை சஞ்சு ஆட்டத்தின் 73-வது நிமிடத்தில் மற்றும் ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 7-1 என்ற செட் கணக்கில் வங்கதேசத்தை வெற்றி பெற்றது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.