Food Type Categories
Food Type Categories

Food Type Categories :

யார் யார் என்ன உணவுகளை உண்ண வேண்டும் என்று தெரியுமா? குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே ஆரோக்கியமாக இருக்க என்ன வழி?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியமாக இருக்க வழிமுறைகள்:

● குழந்தைகள்:

குழந்தைகளுக்கு வேர்க்கடலை, பேரிச்சம் பழம் இவைகளை ஸ்நாக்ஸாக கொடுக்கலாம். ஒரு வாரத்திற்கு மூன்று முறை கீரை உணவுகளை எப்படியாவது சேர்க்க வேண்டும்.

கேழ்வரகை வாரம் இருமுறை அல்லது சேமியா பதத்தில் கொடுக்கலாம். ஆப்பிள் ஆரஞ்சு இவைகளுக்கு பதில் அதே அளவு ஊட்டச்சத்து கொண்ட பப்பாளி கொடுக்கலாம்.

● பெண்கள்:

பெண்கள் மண்சட்டி ,இரும்பு கடாய், மரச் செக்கில் ஆட்டிய எண்ணெய் இவற்றைப் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

தினமும் 5 பேரிச்சம்பழம் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். கருப்பரிசி,கருப்பு உளுந்து, கருப்பு எள்,கருப்பட்டிஇவைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

● ஆண்கள் :

ச்சை காய்கறிகள் மற்றும் இறைச்சியை சமைத்து சாப்பிட பழகவேண்டும் .சீரகத் தண்ணீர் இவைகளை குடிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

●சாதம் :

சாதத்தை குக்கரில் வைக்காமல் கஞ்சியை வடித்து சாப்பிட வேண்டும்.

● தினமும் 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்க வேண்டும்.

● காலை, மாலை இருவேளையும் மலம் கழிக்கவேண்டும் காலை மாலை இரு வேளைகளிலும் குளித்தல் வேண்டும்.

● உள்ளாடைகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றவும்.

●சிறுவர்கள்

ஒரு ஸ்பூன், பெரியவர்கள் இரண்டு ஸ்பூன் வீதம், ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் மென்று வர சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் வராமல் தடுக்கலாம்.

● காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன் தோல் நீக்கிய இஞ்சித்துண்டை, தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.

● மைதாவை தவிர்க்கவும்.ப்ராய்லர் கோழியை தவிர்க்கவும்.அதற்கு பதில் மீன், ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி இவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

● மதியம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு சுக்குகாபியை குடிக்கலாம்

● காலை மாலை இருவேளையும் உடற்பயிற்சி அவசியம் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கட்டாயம் உறக்கம் தேவை.

இவைகள் அனைத்தும் நாம் பின்பற்றினால் நம் வாழ்க்கை ஆரோக்கியமாக, நோயற்ற வாழ்வை வாழலாம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here