Fish Biryani
Fish Biryani

Fish Biryani :

தேவையான பொருட்கள் :

1. வஞ்சர மின் – ¾ கிலோ

2. பாஸ்மதி அரிசி – ¾ கிலோ

3. மஞ்சள் தூள் – 2 ஸ்பூன்

4. மிளகாய் தூள் – 2 ஸ்பூன்

5. கரம் மசாலா – 1 ஸ்பூன்

6. எலும்பிச்சை சாரு – ஒரு பழ அளவு

7. பிரியாணி மசாலா – 2 ஸ்பூன்

8. பட்டை, கிராம்பு, சோம்பு – 3

9. வெங்காயம் – 2

10. தக்காளி – 3

11. பச்சை மிளகாய் – 4

12. இஞ்சி-பூண்டு விழுது – 1 ஸ்பூன்

13. தயிர் – 200 மில்லி

14. நெய் – 5 ஸ்பூன்

15. எண்ணெய் – தேவைக்கு

16. உப்பு – தேவைக்கு

17. புதினா இலை – சிறிது

18. ஏலக்காய் – 3

19. பிரியாணி இலை – 1

20. முந்திரி, திராட்சை – சிறிது

செய்முறை :

முள்ளில்லாத மீன் வஞ்சறை மீனை சுத்தம் செய்து நறுக்கி கொள்ள வேண்டும். ஒரு தட்டில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அதை மீன் மீது தடவி 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு, அதை எண்ணெயில் பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பொரிக்கும் பொது மீன் உடையாமல் இருக்க வேண்டும்.

பிறகு ஒரு பெரிய பாத்திரதில் இரண்டரை லிட்டர் தண்ணீர் ஊற்றி அதில் 3 கிராம்பு, பட்டை, புதினா இலை, ஏலக்காய், பிரியாணி இலை 1 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் எண்ணெய் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

குக்கரில் 2 ஸ்பூன் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சையை பொரித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் அதில் எண்ணெய் விட்டு கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, மராட்டி மூக்கு, சோம்பு போட்டு பொரிந்ததும் அதில் வெங்காயம் போட்டு வதங்கியதும் அதில் பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி வதங்கியதும் அதில் மீன் பொரித்த எண்ணெய் சேர்த்து கிளற வேண்டும். பிறகு அதில் மல்லி இலை, புதினா போட்டு வதக்க வேண்டும். அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

அதில் ஒரு கப் 200 மில்லி தயிர் சேர்த்து கிளறி விட வேண்டும். பிறகு அதில் அரை டம்ளர் தண்ணீர், எலும்பிச்சை சாரு, பிரியாணி மசாலா மற்றும் உப்பு சேர்த்து கொண்டு கிளற வேண்டும்.

பிறகு வறுத்து உள்ள மீனை சேர்த்து மீன் உடையாமல் கிளறிவிட வேண்டும். 5 நிமிடம் மூடி பிறகு அதில் இருக்கும் மீனை கொஞ்சம் கிரேவிவுடன் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.

பிறகு, தண்ணீர் கொதித்ததும் அதில் பாஸ்மதி அரிசியை போட்டு வெக வைக்க வேண்டும். அரிசி வெந்த பிறகு மீதம் இருக்கும் கிரேவியில் கொஞ்சம் போட்டு பரப்பி விட்டு அதன் மேல் மீனை வைக்க வேண்டும்.

பிறகு மீண்டும் அரிசி பரப்பி அதன் மேல் கிரேவி ஊற்றி மீண்டும் அதன் மேல் மீனை வைத்து மல்லி, புதினா இலை, முந்திரி, திராட்சை மற்றும் நெய் சேர்த்து குக்கரை மூடி 5 நிமிடம் கழித்து விசில் போட்டு அந்த குக்கரை ஒரு தோசை சாலக்காய் மீது வைத்துவிட வேண்டும்.

15 நிமிடம் குறைந்த நெருப்பில் வைத்துவிட வேண்டும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு 20 நிமிடம் கழித்து மீனை உடையாமல் எடுத்துவிட்டு, நன்றாக கிளறி பின் அதில் மீனை போட்டு பரிமாறினால் சுவையான மீன் பிரியாணி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here