அதற்குள் இரண்டாவது திருமணம் ஆகும் -12 வருடம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள் என டி இமான் முதல் மனைவி மோனிகா பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

First Wife About D Imman Marriage : தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி இமான். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் இருந்து வந்த நிலையில் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்தார்.

அதற்குள் இரண்டாவது திருமணம்.. உங்களுடன் 12 வருடம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள் - டி இமான் திருமணம் குறித்து முதல் மனைவி போட்ட சர்ச்சை பதிவு.!

இருவரும் பிரிந்த சில மாதங்களிலேயே டி இமான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இமானுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இமானின் முதல் மனைவி மோனிகா தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியுமா? உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

அதற்குள் இரண்டாவது திருமணம்.. உங்களுடன் 12 வருடம் வாழ்ந்த நான் ஒரு முட்டாள் - டி இமான் திருமணம் குறித்து முதல் மனைவி போட்ட சர்ச்சை பதிவு.!

கடந்த இரு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அதற்கும் இரண்டாவது மனைவியைத் தேடி பிடித்து விட்டீர்கள். உங்களிடமிருந்து என்னுடைய பிள்ளைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்பதுபோல பதிவு செய்துள்ளார். மேலும் துணை இல்லாத பெண்கள் பலம் வாய்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.