ஒரு வார முடிவில் மாநாடு படத்தின் வசூல் என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

First Week Collection of Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் மாநாடு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கினார்.

ஒரு வார முடிவில் மாநாடு படத்தின் வசூல் என்ன தெரியுமா?? இதுதான் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுறதா??

நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர், மனோஜ் பாரதிராஜா, ஒய் ஜி மகேந்திரன் என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அதிமுக தலைமை தேர்தல் தொடர்பாக, ஐகோர்ட் இன்று உத்தரவு

ஒரு வார முடிவில் மாநாடு படத்தின் வசூல் என்ன தெரியுமா?? இதுதான் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுறதா??

படத்தில் நடித்துள்ள அனைவரின் நடிப்பும் வேற லெவல் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் ஆகி விட்ட நிலையில் படத்தின் வசூல் என்ன என்பது குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

காக்கி சட்டை போட்டவங்க தான் Real Heroes – Director P.T. Selvakumar Speech | HarishKalyan | HD

அதாவது இதுவரை இந்த படம் 40 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் மூன்று நாளில் படத்திற்கு செலவு செய்யப்பட்ட பணத்தை எடுத்த மாநாடு திரைப்படத்திற்கு தற்போது கிடைத்து வரும் வசூல் அனைத்தும் லாபம் தான் என சொல்லப்படுகிறது.

அதிர்ஷ்டம் வந்துட்டா இதுதான் கூறி பிச்சிக்கிட்டு கொட்டுவதா என ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.