First Movie Release In Theatre After Corona

தியேட்டர் திறந்ததும் மாஸ்டர் படம் கூட ரிலீஸ் இல்லை முதன்முதலாக என்ன படம் ரிலீசாக போகிறது என்பது பற்றி பார்க்கலாம் வாங்க.

First Movie Release In Theatre After Corona : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாவது வழக்கம். ஆனால் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப் பட்டிருப்பதால் படங்கள் ரிலீசாகாமல் இருந்து வருகின்றன.

சில படங்கள் மட்டும் OTT தளங்கள் வழியாக ரிலீஸ் ஆகி வருகின்றன. அக்டோபர் 15-ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்ததாக மாஸ்டர், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸ் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தியேட்டர் திறக்கப்பட்டதும் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தான் ரிலீஸாகும் என ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் மாஸ்டர் படத்திற்கு முன்னதாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி உள்ள இரண்டாம் குத்து என்ற திரைப்படம் தான் வெளியாக உள்ளது.

இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனபோது அடல்ட் காமெடி திரைப்படம் என்பதால் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் இப்படம் வசூலில் பெரிய அளவில் கல்லா கட்டியது.

தற்போது இதன் இரண்டாம் பாகமான இரண்டாம் குத்து திரைப்படம் வெளியாக உள்ளதால் இப்படமும் நிச்சயம் பெரிய அளவில் கல்லா கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.