அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

First Look Release of Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த ஒரு திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் சர்ப்ரைஸ்.. அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது தெரியுமா??

படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்து தற்போது டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி ஆகியோர் இந்த படத்திற்கு டப்பிங் கொடுத்து வருகின்றனர்

அண்ணா தொழிற்சங்கத் தேர்தல் : அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவாவின் பிறந்த நாள் விருந்தாக வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஓரே இடத்தில் Beast-valimai படப்பிடிப்பு! – ரசிகர்களின் கனவு நிறைவேறுமா? | VIjay, Ajith | HD