Valimai Fl

வலிமை இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தது யார் என்பது குறித்த தகவலை போனி கபூர் வெளியிட்டுள்ளார்.

First Look Poster Update Of Valimai : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே ஒன்றாம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் தல அஜித் போனி கபூரிடம் கோரிக்கை ஒன்றை வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வடிவமைத்தது யார் தெரியுமா?? அஜித் ரசிகர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சர்ப்ரைஸ் - போனி கபூர் வெளியிட்ட தகவல்.!!

அதாவது வலிமை பஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து டீஸர், டிரெய்லர் என அடுத்தடுத்த அப்டேட்களை வெளியிட்டு கொண்டே இருக்க வேண்டும் என கோரியுள்ளார். இதற்கு போனி கபூர் அவர்களும் சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாலிவுட் சினிமாவின் புகழ் பெற்ற போஸ்டர் டிசைனர் ராகுல் நந்தா தான் வடிவமைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். இவர் வடிவமைத்த போஸ்டர் பிடித்த வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.