வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்துள்ளார் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர்கள் இணைந்துள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

First Look Poster of Adhikaaram : ஃபைவ் ஸ்டார் கிரியேசன்ஸ் எஸ்.கதிரேசன் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட்ஸ் பிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கும் படம் ” அதிகாரம் ”

வெற்றிமாறனுடன் கூட்டணி சேர்ந்த ராகவா லாரன்ஸ் - அதிகாரப்பூர்வமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதை, திரைக்கதை,வசனம் வெற்றிமாறன் எழுத, எதிர் நீச்சல், காக்கிசட்டை, கொடி, பட்டாஸ் போன்ற படங்களை இயக்கி துரை செந்தில் குமார் இயக்குகிறார்.மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது.தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெற்றிமாறனுடன் கூட்டணி சேர்ந்த ராகவா லாரன்ஸ் - அதிகாரப்பூர்வமாக வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.!!