அதிரடி அட்டகாசமாக தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

தமன் இசையமைக்க ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷ்யாம், யோகி பாபு, குஷ்பூ உட்பட பலர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் வாரிசு எனவும் அறிவித்துள்ளனர்.

இதோ அந்த போஸ்டர்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.