டைட்டிலுடன் செம மாஸாக சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

First Look of Suriya40 : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக சூர்யா 40 என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். நாளை சூர்யாவின் பிறந்த நாள் என்பதால் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் தற்போது படக்குழு அறிவித்தபடி சூர்யா 40 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.