
முதல் நாளில் விடுதலை திரைப்படம் எவ்வளவு வசூல் செய்தது என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூரி. காமெடி நடிகராக பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

மேலும் விஜய் சேதுபதி கௌதம் வாசுதேவ் மேனன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர். நேற்று உலகம் முழுவதும் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் 4 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் இந்த படம் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.