வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பது குறித்து தெரியவந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு.

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? தமிழகத்தில் மட்டும் எவ்வளவு கலெக்சன்? வெளியான பரபர ரிப்போர்ட்.!!

படம் கொஞ்சம் பொறுமையாக செல்வதாகவும் ரன்னிங் டைமும் மட்டுமே குறையாக இருந்தாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெயமோகன் அவர்களின் கதையாக உருவான இந்த படம் பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக சிம்பு மிரட்டலான நடிப்பை கொடுத்துள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

வெந்து தணிந்தது காடு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? தமிழகத்தில் மட்டும் எவ்வளவு கலெக்சன்? வெளியான பரபர ரிப்போர்ட்.!!

இந்த நிலையில் தற்போது இந்த படம் முதல் நாளில் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 6.80 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உலக அளவில் 7.40 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.