முதல் நாளில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்த பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தின் முதல் பாகம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் எவ்வளவு   தெரியுமா? வெளியானது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கசக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 25.86 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம் முதல் நாளில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்களில் லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

முதல் நாளில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் எவ்வளவு   தெரியுமா? வெளியானது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சேர்த்து முதல் நாளில் ரூபாய் 50 கோடி வசூல் செய்துள்ளது. இன்று முதல் ஒரு வாரத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் இன்னும் அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.