First Day Collection of Dil Bechara
First Day Collection of Dil Bechara

First Day Collection of Dil Bechara : ஜூன் மாதம் 14ஆம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவர் கடைசியாக நடித்த படம், ஜான் க்ரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்” என்ற நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தில் பேச்சாரா” படமாகும். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பிறகு இந்த படத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், இதைக் கேட்ட ரசிகர்கள் கொந்தளித்தனர். இந்த படத்தை திரையரங்கில் திரையிட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

வாலியில் ஒரே நாள் நடித்த ஹீரோயினாக நடித்த நடிகை, சிம்ரன் உள்ளே வந்தது எப்படி?? – முதல் முறையாக வெளியான ஷாக்கிங் ஃப்ளாஷ்பேக் ‌

இதைத்தொடர்ந்து, ஜூலை மாதம் 24-ம் தேதி இத்திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டாரில் இலவசமாக வெளியிட முடிவு செய்தனர். இந்த படத்தை ஒரே நாளில் 95 மில்லியன் மக்கள் பார்த்ததாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபீஸ் வல்லுநர்களின் கணிப்பின்படி, தில் பேச்சாரா படமானது ஒரே நாளில் 2000 கோடி வசூலை தட்டி சென்றிருக்கும் என்ற வியப்பான தகவலை கூறியுள்ளனர்.

இந்தப் படத்தை 95 மில்லியன் மக்கள் பார்த்ததற்கு காரணம் என்னவென்றால் சுஷாந்த் சிங்-க்கு கொடுக்கும் அஞ்சலியாக கருதியதே ஆகும்.