முதல் நாளில் பீஸ்ட் படத்தின் வசூல் என்ன என்பது தெரியவந்துள்ளது.

First Day Collection of Beast : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் பீஸ்ட்.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக பீஸ்ட் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. சென்னையில் மட்டும் இந்தப் படம் முதல் நாளான நேற்று ரூபாய் 1.96 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முதல் நாளில் ரூபாய் 1.82 கோடி வசூலித்து இருந்த நிலையில் அதனை பின்னுக்குத் தள்ளியுள்ளது‌.

இப்படம் தமிழகத்தில் முதல் நாளில் ரூபாய் 26.40 கோடி வசூலித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்தார். படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ், கிங்ஸ்லி, விடிவி கணேஷ் என எக்கச்சக்கமானோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.