வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவாக இருக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலமுறுபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் ஜனவரி பதினோராம் தேதி பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகிறது.

வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க சரத்குமார், பிரகாஷ்ராஜ், நடிகர் சாம், யோகி பாபு, பிரபு என பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். ‌

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் வசூல் கிட்டத்தட்ட 25 கோடி வரை இருக்கும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.