பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

First Contestant of BB Ultimate : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பான நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் இவர்தான்.. வெளியானது வீடியோ

இந்த ஐந்து சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்கள் மீண்டும் புதுப் புது வயூகங்களுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இன்று முதல் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளது.

இதுகுறித்து தற்போது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் யானைப் பசி எனக்கு சோளப்பொறி என்ற பாடலை எழுதியவர் என சொல்லப்பட்டுள்ளது. ‌ மேலும் கையில் பாம்பு மற்றும் துப்பாக்கி ஆகியவற்றை வைத்துக்கொண்டு குளூ கொடுத்துள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளர் இவர்தான்.. வெளியானது வீடியோ

இதன் மூலம் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக பங்கேற்க போவது சினேகன் தான் என தெரியவந்துள்ளது.