Fire Accident in Prabhas Movie Shooting

பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பில் தீ விபத்து ஏற்பட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Fire Accident in Prabhas Movie Shooting : தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரபாஸ்.தமிழில் பாகுபலி, பாகுபலி 2 என்ற இரண்டு படங்கள் இவரது நடிப்பில் வெளியாகி உலக அளவில் சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் அடுத்ததாக “ஆதிபுருஷ்”என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்தப் படப்பிடிப்பு மும்பையில் நேற்று தொடங்கிய நிலையில் சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் எப்போது தொடங்கும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.