விஷ்ணு விஷாலின் நடிப்பு மட்டும் தயாரிப்பில் வெளியாக உள்ள FIR படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

FIR Movie Review : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் எப்ஐஆர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார்.

விஷ்ணு விஷால் உடன் ரைசா வில்சன், மஞ்சிமா மோகன், கௌதம் வாசுதேவ் மேனன் இதனை பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

படத்தின் கதைக்களம் :

அபூபக்கர் அப்துல்லா என்ற பெயரில் உலாவரும் பயங்கரவாதி ஒருவர் இலங்கையில் உள்ள தலைநகர் கொழும்புவில் 8 இடங்களில் குண்டு வைத்து குண்டுவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்துகிறார். இதனால் உளவுத்துறை இந்த அபூபக்கரை தேடிவர இவர்களிடம் எதிர்பாராத சிக்கிக் கொள்கிறார் முஸ்லிம் இனத்தைச் சார்ந்த விஷ்ணு விஷால்.

உளவுத்துறை இவர்தான் அந்த அபுபக்கர் அப்துல்லா என முடிவு செய்ய இந்த பிரச்சனையிலிருந்து விஷ்ணு விஷால் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

ராஜேஷின் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் திரைப்பயணத்தில் மிக முக்கிய படமாக எப்ஐஆர் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. அந்த அளவிற்கு நடிப்பில் மெருகேற்றி உள்ளார். ஆக்ஷன், எமோஷன், காதல் தோல்வி, அம்மா பாசம் என அனைத்திலுமே ஸ்கோர் செய்துள்ளார்.

இவர் மட்டுமல்லாமல் படத்தில் நடித்துள்ள ரைசா வில்சன் தனது கதாபாத்திரம் அறிந்து திறம்பட நடித்துள்ளார். மேலும் மஞ்சிமா மோகன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளனர்.

அஸ்வந்த் என்பவரின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. அருள் வின்சன்ட் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஜிகே பிரசன்னாவின் எடிட்டிங் கனகச்சிதம். அறிமுக இயக்குனர் என சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக படத்தை இயக்கி சீட் நுனியில் நம்மை கட்டிப் போடுகிறார் இயக்குனர் மனு ஆனந்த்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதைக்களம்

2. விஷ்ணு விஷால் நடிப்பு

3. ஒளிப்பதிவு மற்றும் இசை

4. திரைக்கதை

தம்ப்ஸ் டவுன் :

1. வழக்கமான சில லாஜிகல் தவறுகள்

REVIEW OVERVIEW
FIR விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
fir-movie-reviewமொத்தத்தில் FIR விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத சூப்பர் ஆக்ஷன் திரைப்படம்.