மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

FIR filed against Seeman for controversial talk – விக்கிரவாண்டி தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம் செய்தார்.

கஞ்சனூர் பகுதில் அவர் பேசிய போது ராஜீவ் காந்தியை படுகொலை செய்யப்பட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் பேசினார். அதாவது, ராஜீவ் காந்தியை கொலை செய்தது சரிதான் எனப் பேசினார்.

சீமானின் இப்படி பேசியது காங்கிரஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

சென்னையில் சீமானின் உருவ பொம்மையை எரித்தும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here